கடவுளின் கூகுள் பே எண்

கடவுளின் கூகுள் பே எண்

முத்துவேல் ஒரு திறமையான கைவினைஞர். ஆனால் அவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் அவருக்கு வாழ்க்கை ஒரு போராட்டமாக இருந்தது, அவரது இரண்டு குழந்தைகளின் படிப்புச் செலவு மற்றும் வயதான பெற்றோரின் மருத்துவச் செலவுகளுடன் தினமும் பல இன்னல்களை சந்தித்தார்

“நாமளே சின்னதா ஒரு பொம்மை செய்யுற கடை ஆரம்பிச்சா என்ன?” என்று அவனுடைய மனைவி கேட்டபோது, ​​முத்துவேலுக்கும் அது சரி என்று பட்டது. வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே. மரக்கட்டைகளும், வர்ணங்களும் வாங்கினால் போதும், அவரது கைகள் அற்புதங்களை நிகழ்த்தும்.

உதவி கேட்டல் 

மிகுந்த நம்பிக்கையுடன், முத்துவேல் தன்னுடைய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் உதவி கேட்டான்.

” மச்சி, ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தா கொடுடா… தொழில் தொடங்கிட்டு முதல்ல உனக்குத்தான் திருப்பித் தருவேன்,” என்று நண்பனிடம் கேட்டான். நண்பனோ, “எனக்கே. இப்ப கஷ்ட காலம் மச்சி, அடுத்த மாசம் பார்க்கலாம்” என்று நழுவிக்கொண்டான்.

“மாமா, ஒரு சின்ன உதவி,” என்று உறவினரிடம் கேட்டதற்கு, “இப்பதாண்டா என் பையனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்டினேன், கையில ஒத்த பைசா இல்ல,” என்று அவரும் கைவிரித்துவிட்டார்.

போன இடமெல்லாம் ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது. ஆயிரம் ரூபாய் என்பது அவ்வளவு பெரிய தொகையா என்ன? மனம் உடைந்துபோன முத்துவேல், வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்குச் சென்றான். கடவுள் சிலைக்கு முன்பு நின்று, “கடவுளே, என் கஷ்டங்கள் உனக்குத் தெரியாதா? யாரிடமும் உதவி கேட்கக்கூடாது என்றுதான் நினைத்தேன். ஆனால், என் சூழ்நிலை அப்படி. எனக்கு உதவி செய்ய யாருமே இல்லையா?” என்று மனமுருக வேண்டினான்.

அப்போது அவனது மனதில் ஒரு விந்த சிந்தனை மெரிந்தது. “இந்தக் காலத்துல எல்லாரும் ஆன்லைன்லதான் இருக்காங்க. கடவுளும் கண்டிப்பா அப்டேட்டாத்தான் இருப்பாரு. நாம ஏன் நேரடியாகக் கடவுளுக்கே ஒரு மெசேஜ். அனுப்பிப் பணம் கேட்கக் கூடாது?”

கூகுள் பே செயலி

உடனே தன் பழைய ஸ்மார்ட்ஃபோனை எடுத்து, கூகுள் பே செயலியைத் திறந்தான். ‘புதிய பேமெண்ட்’ பட்டனை அழுத்தினான். யாருக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்று கேட்கும் இடத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தான்.

கடவுளோட போன் நம்பர் என்ன? இல்லன்னா, அவரோட UPI ஐடி என்னவா இருக்கும்? ‘kadavul@heaven’ன்னு இருக்குமோ?” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

பலவாறு யோசித்துப் பார்த்த அவனுக்கு ஒரு புத்திசாலித்தனமான (அவனைப் பொறுத்தவரை) யோசனை தோன்றியது. “கூகுள் பே மூலமாத்தானே பணம் கேட்க போறோம். அப்போ, கூகுள் பே கம்பெனிக்கே கடவுளோட நம்பர் தெரிஞ்சிருக்குமே! அவங்க ஹெல்ப் சென்டர்ல கேட்டா என்ன?”

உடனடியாக, கூகுள் பே செயலியின் ‘உதவி & பின்னூட்டம்’ வசதிச் சென்றான். அதில் இருந்த ‘எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்’ என்பதை அழுத்தி, சாட் சபோர்ட் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தான்.

சிறிது நேரத்தில்,கூகுள் பே பக்கம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது.

உதவி மையம்:

“வணக்கம், நான் உங்கள் கூகுள் பே உதவி பிரதிநிதி. உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?”

முத்துவேல்: “வணக்கம். நான் கடவுளிடம் ஆயிரம் ரூபாய் கேட்க விரும்புகிறேன். ஆனால், அவருடைய மொபைல் எண்ணோ அல்லது யுபிஐ ஐடியோ என்னிடம் இல்லை. தயவுசெய்து அதை எனக்குக் கொடுக்க முடியுமா?”

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு பதில் வந்தது.

உதவி மையத்தில் உள்ள பிரதிநிதி”சாரி ஐயா, கடவுளின் நேரடி தொடர்பு எண் எங்கள் பட்டியலில் இல்லை.” என்று பிரதிநிதி கூறினார்  மறுமுனையில் சில வினாடிகள் அமைதி நிலவியது. உடனே  பிரதிநிதி  அவர் என்ன நினைத்தரோ  என்று  தெரியவில்லை. முத்துவேலின் அப்பாவித்தனத்தைக் கண்டு அவர் குழப்பமடைந்தாரா அல்லது அவரது நம்பிக்கையைக் கண்டு ஆச்சரியப்பட்டாரா என்று தெரியவில்லை.

பணம் பெறுதல்

உடனடியாக, பிரதிநிதி தனது கூகிள் பே கணக்கிலிருந்து 900 ரூபாயை  முத்துவேலின் கணக்கிற்கு மாற்றினார். உடனே அவன் கணக்கிற்கு 900 வந்த உடன் கடவுளே  “நீங்கள் எனக்கு உதவி செய்தீர்கள்” என்று சத்தமாகக் கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றார்.

புதிய உத்வேகத்துடன் அவர் வீட்டிற்குச் சென்றார். வீட்டிலிருந்து பழைய மரச் சாமான்களை எடுத்து அழகான பொம்மைகளாகச் செதுக்கத் தொடங்கினார். ஒரு பக்கத்து வீட்டுக்காரர், அவரது கஷ்டத்தைக் கண்டு, அவருக்குத் தேவையான வண்ணப்பூச்சுகளை வாங்கினார்.

இரண்டு நாட்களில், முத்துவேல் செய்த மர பொம்மைகள் அருமையாக இருந்தன. அவர் அவற்றை எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்றார். அவரது கடின உழைப்பும் நேர்மையும் பலனளித்தன. முதல் நாளிலேயே வணிகம் ஐநூறு ரூபாய்க்கு மேல்  நடந்தது.

அன்று இரவு, முத்துவேல் மீண்டும் கோவிலுக்குச் சென்றார். “கடவுளே, நீங்க எனக்கு நம்பர் கொடுத்திருக்க மாட்டீங்க. ஆனா நீங்க எனக்கு உதவி செய்ய சரியான வழியைக் காட்டினீங்க. நன்றி,” என்று மனதாரச் சொல்லி, தன் உண்டியலில் பத்து ரூபாயை காணிக்கையாகக் கொடுத்தான்.

ஆனா எனக்கு ஒரே ஒரு குறை இருக்கு. நீங்க எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தீங்க, ஆனா ஹெல்ப் டெஸ்க் ஆபீசர் 100 ரூபாய் எடுத்துட்டு 900 ரூபாய் கொடுத்தார். என்று கூறினான்,

கடவுளுக்கு சிரிப்பு வந்துவிட்டது

கூகுள் பேயில் கிடைக்காத கடவுளின் உதவி, அவனுள் இருந்த நம்பிக்கையின் மூலம் அவனுக்குக் கிடைத்துவிட்டது.

இந்தக் கதை முழுவதும் கற்பனையே யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல.

Leave a Reply