கல்வி உளவியல் மற்றும் நுண்ணறிவு வினா- விடை தொகுப்பு பகுதி 1

கல்வி உளவியல் மற்றும் நுண்ணறிவு வினா- விடை

1.தட்டைப்புழுக்களை (planarians) பயன்படுத்தி ஆக்க நிலை துலங்கல் (Classical Conditioning) சோதனைகளைச் செய்து எளிய உயிரினங்களிலும் கற்றல் நிகழும் எனக் காட்டிய உளவியலாளர் யார்?

A.இவான் பாவ்லோவ்

B.பி. எஃப். ஸ்கின்னர்

C.எரிக் கேண்டல்

(D). ஜேம்ஸ் V. மெக்கானெல்

2.முயன்று தவறி கற்றல் (Trial and Error Learning) கோட்பாட்டைக் கூறியவர் யார்?

(அ) கோலர்

(ஆ) தார்ண்டைக்

(இ) ஸ்கின்னர்

(ஈ) பிளேட்டோ

3.கோலர் (Köhler) தனது “உட்காட்சி கற்றல்” (Insight Learning) சோதனையில் பயன்படுத்திய விலங்கு எது?

(அ) பூனை

(ஆ) நாய்

(இ) சிம்பன்சி

(ஈ) எலி

 4.கோலரின் சோதனையில், சிம்பன்சி வாழைப்பழத்தை அடைய குச்சிகளை இணைப்பதும், பெட்டிகளை அடுக்கி வைப்பதும் எதைக் குறிக்கிறது?

(அ) இது ஒரு தற்செயல் நிகழ்வு

(ஆ) இது முயன்று தவறி கற்றல்

(இ) சூழலின் முழுமையையும், பொருட்களுக்கு இடையிலான   தொடர்பையும் திடீரெனப் புரிந்துகொள்ளும் “உட்காட்சி”

(ஈ) இது ஆக்கநிலையுறுத்த கற்றல்

5. முழுமையே அதன் பகுதிகளை விட முக்கியமானது” (The whole is greater than its parts) என்று கூறி, “களம்” (Field) மற்றும் “தொடர்பு” (Relation) ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்த உளவியல் பிரிவு எது?

(அ) கெஸ்டால்ட் உளவியல்

(ஆ) நடத்தைவாதம்

(இ) மன பகுப்பாய்வு

ஈ) தார்ண்டைக் கோட்பாடு

6.கடினமான பாடங்களான கணிதம் போன்றவற்றைக் கற்பதன் மூலம் ஒருவரின் மனம் கூர்மையடைகிறது, இதனால் அவர் மற்ற பாடங்களையும் எளிதாகக் கற்றுக்கொள்வார்” என்ற கருத்தைக் கொண்டது எது?

(அ) ஒத்த கூறுகள் கோட்பாடு

(ஆ) பொதுமைப்படுத்தல் கோட்பாடு

(இ) பழைய மரபுக் கொள்கை

 (ஈ) உட்காட்சி கற்றல்

7. கணிதத் துறை சிறப்பாகக் கற்ற ஒருவர் எந்தப் பாடமாக இருந்தாலும் சரியாகக் கற்றுக் கொள்வார்” என்ற ‘பழைய மரபுக் கொள்கை’யை (Formal Discipline) வலுவாக ஆதரித்தவர் யார்?

(அ) தார்ண்டைக் (ஆ) புளூம் (இ) பிளேட்டோ (ஈ) கோலர்

8. கற்றல் பயிற்சி மாற்றம் (Transfer of Learning) பற்றிய ‘ஒத்த கூறுகள் கோட்பாட்டை’ (Theory of Identical Elements) வழங்கியவர் யார்?

(அ) ஸ்கின்னர் (ஆ) தார்ண்டைக் (இ) பியாஜே (ஈ) பெஞ்சமின் புளூம்

9. கற்றலின் நோக்கங்களை (Objectives of Learning) அறிவு, புரிதல், பயன்படுத்துதல், பகுத்தாய்தல், தொகுத்தாய்தல், மதிப்பிடுதல் என வகைப்படுத்தியவர் யார்?

(அ) கோலர் (ஆ) பிளேட்டோ (இ) தார்ண்டைக் (ஈ) பெஞ்சமின் புளூ 

10. பொருள்படக் கற்றலுக்காக (Meaningful Learning), புதிய தகவல்களை ஏற்கனவே உள்ள அறிவுடன் இணைக்க உதவும் “முற்போக்கு அமைப்பாளர்களை” (Advance Organizers) அறிமுகப்படுத்திய சிந்தனையாளர் யார்?

(அ) டேவிட் ஆசுபெல் ஆ) ஜெரோம் புரூணர்(இ) ஜான் டூயி (ஈ) பெஞ்சமின் புளூம்

11.கற்றல் என்பது ஒரு படிநிலையைக் கொண்டது என்றும், அதில் “பிரச்சினை தீர்த்தல்” (Problem Solving) என்பது கற்றலின் உயர்நிலை என்றும் கூறியவர் யார்?

(அ) தார்ண்டைக் (ஆ) ராபர்ட் காக்னே (இ) கோலர் (ஈ) பிளேட்டோ

12.கற்றல் என்பதே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான்” என்றும், “ஒரு முழுமையான தீர்வைக் காண்பது என்பது சிந்தனையின் முழுமையான செயல்” என்றும் கூறியவர்?

(அ) ஜான் டூயி (ஆ) பி.எஃப். ஸ்கின்னர் (இ) ஆசுபெல் (ஈ) புரூணர்

13.கற்பித்தலின் இலக்குகளை (Objectives) “அறிவு, புரிதல், பயன்படுத்துதல், பகுத்தாய்தல், தொகுத்தாய்தல், மதிப்பிடுதல்” எனத் தெளிவாக வகைப்படுத்தியவர் யார்?

(அ) பெஞ்சமின் புளூம் (ஆ) தார்ண்டைக் (இ) ஜான் டூயி (ஈ) ராபர்ட் காக்னே

14.முயன்று தவறி கற்றல் (Trial and Error Learning) என்ற கருத்தை தனது சோதனைகள் (எ.கா. பூனைப் பெட்டி) மூலம் விளக்கியவர் யார்?

(அ) கோலர் (ஆ) பாவ்லோவ் (இ) எட்வர்ட் தார்ண்டைக் (ஈ) ஜான் டூயி

15.ஜெரோம் புரூணர் (Jerome Bruner) கூறிய கற்றலின் மூன்று நிலைகள் (Modes of Representation) யாவை?

(அ) செயல் நிலை, உருவ நிலை, குறியீட்டு நிலை (Enactive, Iconic, Symbolic)

(ஆ) அறிவு, புரிதல், பயன்படுத்துதல்

(இ) முயற்சி, தவறு, வெற்றி

(ஈ) தூண்டல், துலங்கல், வலுவூட்டல்

Red marked is answer சிவப்பு நிறத்தில் குறியிடப்பட்டிருப்பது பதில். 

Leave a Reply