பள்ளிக்குப் பதில் ஜவுளிக்கடை தடுக்கப்பட்ட திருமணம் தனிமையில் வாடும் “வேண்டா
பள்ளிக்குப் பதில் ஜவுளிக்கடை: தடுக்கப்பட்ட திருமணம், ஆனால் காப்பாற்றப்பட்டும் தனிமையில் வாடும் “வேண்டா” !
எச்சரிக்கை / Disclaimer: இந்தக் கட்டுரை சமூக விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் சம்பவங்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உண்மைக் கதைகளைத் தழுவியது. தற்கொலை அல்லது வன்முறையைத் தூண்டுவது இதன் நோக்கமல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், உடனடியாக 1098 அல்லது மாநிலத்தின் மனநல உதவி எண்ணான 14416 (TeleMANAS)ஐப் பயன்படுத்தவும் தற்கொலை தடுப்பு மையத்தை அணுகவும்.
ஒரு குழந்தைத் திருமணத்தின் மறுபக்கம்
முன்னுரை:
ஒரு குழந்தைத் திருமணத்தை நிறுத்துவது மட்டும் வெற்றியல்ல; அந்தப் பெண் குழந்தையை மீண்டும் சமூகத்தில் இயல்பாக வாழ வைப்பதே உண்மையான வெற்றி. இது, 16 வயதில் திருமணத்திலிருந்து தப்பித்த வேண்டா , ஆனால் சமூகத்தின் புறக்கணிப்பால் குடும்பம் மற்றும் உறவினர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு பள்ளிப் படிப்பை இழந்த “வேண்டா”வின் உண்மைக் கதை இது (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
1. ரயில் நிலையத்தின் தனிமை (The Scene)
தமிழகத்தின் பரபரப்பான ரயில்வே நிலைய சந்திப்பு அது. மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தாலும், அந்த 16 வயதுச் சிறுமி மட்டும் திக்குத் தெரியாமல் நின்று கொண்டிருந்தாள். கையில் பையில்லை, முகத்தில் எதிர்காலம் குறித்த பயம் மட்டுமே இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் அவள் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.
பரபரப்பான ரயில் நிலையம் ஆனால் பணியில் இருக்கும் குழந்தைகள் நல அதிகாரி (Child Welfare Officer) விருந்தாவன் அவள் என்ன செய்கிறாள் என்பதை கண்கள் அவளைக் கவனித்தன. அவர் அவளிடம் சென்று, “நீ யார்? எங்கே போக விரும்புகிறாய்?” என்று கேட்டார். அவளுடைய வாழ்க்கைக் கதை அந்தக் கேள்வியுடன் தொடங்கியது.
என் பெயர் வேண்டா. எனக்கு கல்யாணமே வேண்டாம்… படிக்கணும்னு ஆசை…” என்று உடைந்த குரலில் பேசத் தொடங்கினாள்.மேலும் அவள் கூறினாள் எனக்கு வயது 16
2. துரத்திய நிழல் (The Stalker)
வேண்டா, தமிழ்நாட்டின் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த ஆதி திராவிடர் வகுப்பைச் சார்ந்த பெண். தந்தை விவசாயக் கூலி. குடிசை வீடு. ஏழ்மை இருந்தாலும், 11-ம் வகுப்பு படிக்கும் வரை அவளுக்குப் படிப்பு மட்டுமே உலகமாக இருந்தது.
ஆனால், பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு தூரத்து உறவினர் அவளைப் பின்தொடர ஆரம்பித்தார். அவரை விட 10 வயது மூத்தவர். “உன்னைத் தான் கட்டிக்கப்போறேன்” என்று அவர் வழிமறித்துச் சொன்னபோது, வேண்டாவுக்கு ஏற்பட்ட நடுக்கம் சொல்லில் அடங்காதது.
3. தந்தையின் “பாதுகாப்பு” முடிவு (The Pressure)
அந்த நபர், தன் குடும்பத்தோடு வந்து பெண் கேட்டார். “பையன் நம் சொந்தம் தானே, நாளைக்கு இவளுக்குப் பாதுகாப்பு இருக்கும், கல்யாண செலவும் மிச்சம்” என்ற தப்புக் கணக்கைப் போட்டார் வேண்டாவின் தந்தை. மகளின் சம்மதம் அவருக்குத் தேவைப்படவில்லை.
“எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம்ப்பா, நான் படிக்கணும்” என்று வேண்டா அழுத அழுகை, அந்த வீட்டில் யாருடைய காதுக்கும் கேட்கவில்லை. “தங்கச்சி பாப்பா இருக்கு, தம்பி இருக்கான்… நீ போனாதான் அவங்க வாழ்வு விடியும்” என்ற சென்டிமென்ட் கயிறு மூலம் அவளைக் கட்டினார்கள்.
4. தப்பித்தல் மற்றும் மீட்பு (Escape & Rescue)
திருமண ஏற்பாடுகள் தீவிரமடைந்தன. தாலி ஏறும் நேரம் நெருங்கியது. “இனியும் இருந்தால் என் படிப்பு கனவு கருகிவிடும்” என்று உணர்ந்த வேண்டா, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ரயிலேறினாள்.
குழந்தைகள் நல அதிகாரியால் மீட்கப்பட்ட அவள், 2 மாதங்கள் குழந்தைகள் காப்பகத்தில் (Care Home) தங்க வைக்கப்பட்டாள். திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. சட்டப்படி அவள் காப்பாற்றப்பட்டாள். ஆனால், உண்மையான பிரச்சனை இனிமேல்தான் ஆரம்பித்தது.
5. சமூகத்தின் மௌன தண்டனை (Social Stigma & Isolation)
சட்டப்படி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட அவள், ஆர்வமாக வீட்டுக்குச் சென்றாள். ஆனால், வீடு அவளை வரவேற்கவில்லை.
- “வீட்டை விட்டு ஓடிப்போனவள்” என்று பெற்றோர் அவளிடம் பேசுவதை நிறுத்தினர்.
- உறவினர்கள் அவளைத் தீண்டத்தகாதவளாகப் பார்த்தனர்.
- மிகக்கொடுமையாக, பள்ளிக்குச் சென்றால் அங்கும் அவளைத் தனிமைப்படுத்தினார்கள்.
யார் ஒருவருக்காக அவள் திருமணத்தை எதிர்த்தாளோ, அந்தச் சமூகமே அவளை ஒதுக்கி வைத்தது. அந்தத் தனிமை (Isolation) அவளை மன அழுத்தத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.
புறக்கணிப்பு என்பது மற்ற வகையான துஷ்பிரயோகங்களிலிருந்து வேறுபட்டது. மற்ற வகையான துஷ்பிரயோகங்களில், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார்கள். புறக்கணிப்பில், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகள் மீது அன்பையும் பாசத்தையும் காட்டத் தவறிவிடுகிறார்கள்
6. இறுதி நிலை (Current Situation)
மன அழுத்தத்தைத் தாங்க முடியாத வேண்டா, 11-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டாள். இன்று, அவள் பக்கத்து ஊரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் துணி மடித்துக் கொண்டிருக்கிறாள்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ, ஆசிரியராகவோ ஆகியிருக்க வேண்டிய ஒருத்தி, இன்று வெறும் விற்பனைப் பெண்ணாகச் சுருங்கிப்போனது யாருடைய தவறு?
உளவியல் & சமூகக் கண்ணோட்டம்
(Psychological & Social Perspective)
இந்தக் கதை நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?
- Re–integration Failure (மறுவாழ்வு தோல்வி):
குழந்தைத் திருமணத்தைத் தடுத்தால் மட்டும் போதாது. அந்தக் குழந்தை மீண்டும் வீட்டுக்குச் செல்லும்போது, பெற்றோர் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும் (Follow–up is crucial).
- Emotional Blackmail (உணர்வுப்பூர்வ மிரட்டல்):
பெற்றோர்கள் தங்கள் வறுமையையும், மற்ற குழந்தைகளின் எதிர்காலத்தையும் காட்டி, மூத்த பெண் குழந்தைகளின் கனவுகளை சிதைத்துவிடுதல்
- Secondary Victimization (இரண்டாம் நிலை பாதிப்பு): வீட்டை விட்டு ஓடி வந்தது தற்காப்புக்காகத்தான். ஆனால், சமூகம் அதை “ஒழுக்கக் குறைவு” என்று முத்திரை குத்தி, அவளை மீண்டும் மீண்டும் தண்டிப்பது அவளை மனரீதியாகச் சாகடிப்பதாகும்.
தீர்வு: குழந்தையை மீட்பது முதல் படி. அவளைப் படிக்க வைப்பதும், அவளது குடும்பத்திற்குத் தகுந்த உளவியல் ஆலோசனை (Counseling) வழங்குவதும் தான் முழுமையான தீர்வு.
தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும் மனநலத்திற்கான முக்கிய உதவி எண்கள்:
- குழந்தைகள் உதவி எண் 1098: உதவி, உதவி தேவைப்படும் அல்லது துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்கான 24/7 கட்டணமில்லா அவசர உதவி எண்.
- டெலிமனாஸ் 14416: தமிழ்நாடு அரசின் 24/7 கட்டணமில்லா மனநல ஆலோசனை சேவை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் உட்பட அனைத்து வயது மக்களுக்கும் ஆதரவை வழங்குகிறது.
- அரசு சுகாதார உதவி எண் 104: பொது மருத்துவ மற்றும் மனநல ஆதரவுக்காக, ஆலோசனை சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Image courtesy: AI Technology & Writing neatness & assistance: AI technology
