பசுமையும் பாரம்பரியமும் ஒரு பார்வை

பசுமையும் பாரம்பரியமும் ஒரு பார்வை

இயற்கை என்றால் உடனே நமக்கு நினைவுக்கு வருவது பசுமையான சூழல்கள் காடுகள், புல்வெளிகள், மலைகள், இயற்கை சூழ்ந்த சூழலாகும். பாரம்பரியம் என்றால் நமக்கு நினைவு கூறுவது நம்முடைய தாத்தா, பாட்டி இனம் , மொழி, நாடு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் போன்றவை ஆகும்

பாரம்பரியமும் என்றால் என்ன?

பாரம்பரியம் என்று சொல்லுக்கு பொருள் மரபு வழியாக மக்கள்  நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் போன்றவை பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிறது. இன்னும் பாரம்பரிய பற்றி மேலும்  ஒரு  படி சொல்ல வேண்டுமென்றால்.

கோவிட் (கொரோனா) பெருந்தொற்று

2019 ஆம் ஆண்டு  கொரோனா  கோவிட் (கொரோனா) பெருந்தொற்று காலத்தில்  ஏற்பட்ட நெருக்கடியான சூழல்கள் நாம் நான்கு அறிவோம் மக்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பேச முடியாத சூழ்நிலை அருகில் இருக்கும் இல்லத்திற்கோ திருமணமோ, கலை நிகழ்ச்சி, கலாச்சார நிகழ்வுகளை பங்கேற்க முடியாத ஒரு சூழல் இருந்தது.

அப்போது தமிழகத்தில் பல கிராமங்களில் வீடுகளில் வேப்பிலை, மஞ்சள் போன்ற  கபச குடிநீர், நிலவேம்பு கசாயம், போன்ற பல்வேறு நம் முன்னோர்கள் பயன்படுத்திய சித்த வைத்திய முறை, நாட்டு வைத்திய முறை, ஆயுர்வேதா, யுனானி போன்ற பல்வேறு மருத்துவ முறைகளை அதிக அளவில் பயன்படுத்தினார்கள்.

மஞ்சள் வேம்பு

வீடுகளில் மஞ்சளை வேப்பிலை அரைத்து தெளிப்பது மஞ்சளை அரைத்து வேப்பிலை நீரில் குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இந்த அறிவு எங்கிருந்து வந்தது? நமது பாரம்பரியமாக நம்முடைய முன்னோர்கள் செய்த சிகிச்சை முறை  அப்போது நாம்  முன்னோர்கள் காயங்களுக்கும், சளிகளுக்கும் காய்ச்சலுக்கும் வேப்பிலை, மஞ்சளை பயன்படுத்துவது இது நம்முடைய பாரம்பரிய பழக்க வழக்கில் ஒன்று.

செங்காந்தள் மலர்

நமது தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் மலர்  மகத்தான மருத்துவ பலன்களை கொண்ட இந்த கொடி நமது தமிழக சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற சங்க இலக்கியங்களில் இந்த மலரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்காந்தள், காந்தள், கார்த்திகைப் பூ, கண்வலிப் பூ, கலப்பைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு எனப் பல பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. “கண்வலிப் பூ” என்று அழைக்கப்படுவதற்கு, இந்தப் பூவை உற்றுப் பார்த்தால் கண்வலி வரும் என்ற ஒரு நம்பிக்கை பழங்குடியினரிடையே என்ற ஒரு நம்பிக்கை  உள்ளது.

செங்காந்தள் பூக்கள் முதலில் பச்சைநிறத்திலும் பின்னர் வெண்மை கலந்த மஞ்சள் நிறத்திலும் பிறகு மஞ்சள் செம்மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு என நிறம் மாறிக்கொண்டே போகும்.

இந்த மலரில் அதிகளவு தேன் அதிகமாக காணப்படுவதால் எப்போதும் வண்டுகளும் தேனீக்களும் வட்டமிட்டுக் கொண்டிருக்கும்

இந்த பூ வாடினாலும் உதிர்வதில்லை செங்காந்தள் மலர் மருத்துவ குணம் கொண்டது என்றாலும், இதன் அனைத்து பாகங்களிலும், குறிப்பாக இதன் வேர் மற்றும் விதைகளில் “கோல்ச்சிசின்” (Colchicine) என்ற நச்சுப்பொருள் அதிகமாக உள்ளது. இதை உட்கொண்டால் மரணம் சம்பவிக்கும் வாய்ப்புள்ளது. இலை அல்லது தண்டு உடலில் பட்டால் அரிப்பு ஏற்படும்.

இருப்பினும், இதன் விதைகளிலிருந்து புற்றுநோய் மற்றும் ஆண்மை விருத்தி போன்றவற்றுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவ முறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. மூட்டுவலி நிவாரணத்திற்கான மருந்துகளிலும் இது உபயோகப்படுத்தப்படுகிறது.

இந்த மலர் புற்றுநோய் பாம்புகடி. தேள்கடி, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம், தலைவலி கழுத்து நரம்பு வலி என பல வேறு மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது நேரடியாக பயன்படுத்தப்படவில்லை என்றாலும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது

செங்காந்தள் மலர், அதன் அழகியல், வரலாற்றுச் சிறப்பு, மருத்துவப் பயன்கள் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக நம் தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

Leave a Reply